செவ்வந்தி தப்பியோடிய படகு சிக்கியது...
இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்கு தப்பிச்செல்வதற்கு பயன்படுத்தியதாகக் கூறப்படும் படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த படகானது கொழும்பில் இருந்து குற்றப் புலனாய்வுப்பிரிவின் சிறப்பு அணியினரால் கைப்பற்றப்பட்டு யாழ். பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் தீவிர விசாரணை
இதேவேளை கைப்பற்றப்பட்ட படகின் இயந்திரத்தை காணவில்லை என்றும், குறித்த படகை ஓட்டிச் சென்ற இரு இளைஞர்கள் தலைமறைவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை தலைமறைவாகியுள்ள இளைஞர்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, இந்தியாவிற்கு தப்பிச்செல்ல உதவிய குற்றச்சாட்டில் ஆனந்தன் என்பவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



