ஐஸ்கிரீமுக்குள் துண்டிக்கப்பட்ட கைவிரல்: இந்தியாவில் சம்பவம்
இந்தியாவில் இணையம் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட ஐஸ்கிரீமுக்குள் மனித விரல் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளமையானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவின் மும்பாயில் இடம்பெற்றுள்ளது
மருத்துவர் ஒருவர் கொள்வனவு செய்த ஐஸ்கிரீமிலேயே இந்த விரல் பகுதி காணப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
இந்தநிலையில் மேலுள்ள உறையை அகற்றி விட்டு அதனை நுகர முற்பட்டபோது அதில் ஒரு பொருள் தென்பட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து எடுத்து பார்த்தபோது அது மனிதனின் துண்டிக்கப்பட்ட கைவிரல் என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து குறித்த கைவிரல் பரிசோதனைக்கான அனுப்பப்பட்டுள்ளது
அத்துடன் ஐஸ் கிரீம் உற்பத்தியாளருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |