தாக்குதல்களின் தீவிரத்தை அதிகரித்துள்ள ஹிஸ்புல்லா: அவசரமாக கூடும் இஸ்ரேலிய அமைச்சரவை
ராஃபா(Rafah) எல்லையில் போர் பதற்றமானது தற்போது அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலின் அமைச்சரவை இன்று கூடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடக்கு இஸ்ரேலில் தீவிரமடைந்துள்ள போர் தொடர்பில் விவாதிக்கவே அமைச்சரவை கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி ஒருவர் இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் பலியான சம்பவம் காரணமாக, தாக்குதல்களின் தீவிரத்தை அதிகரிக்க ஹிஸ்புல்லா உறுதியளித்துள்ளது.
அவசர கூட்டம்
இந்நிலையில், இராஜதந்திர பாதுகாப்பு, மற்றும் இராணுவ வழிமுறைகள் மூலம் வடக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பை மீட்டெடுக்கும் திட்டத்தை வகுக்கவே குறித்த அவசர கூட்டம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதற்கமைய ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே முழுப் போர் வெடிப்பதைத் தடுக்க அமெரிக்கா தற்போது திரைக்குப் பின்னால் போராடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |