காசாவை சுற்றிவளைக்கும் இஸ்ரேலிய இராணுவ தாங்கிகள் : பட்டினியால் வாடும் மக்கள்
தெற்கு காசா நகரமான ரஃபாவை இஸ்ரேலிய(Israel) இராணுவ தாங்கிகள் சுற்றிவளைத்துவரும் நிலையில், அங்கிருந்து தப்பிக்கும் மக்கள் மரணத்தையும் பட்டினியையும் எதிர்கொள்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஃபா பகுதியை உலங்கு வானூர்தி, ட்ரோன் மற்றும் இராணுவ தாங்கிகளால் இஸ்ரேலிய இராணுவம் தீவிரமாக தாக்கி வரும் இந்த நெருக்கடியான சூழலில் அங்குள்ள மக்கள் உணவு, குடிநீர் அல்லது குடியிருப்பு வசதிகள் ஏதுமற்ற பகுதிக்கு தப்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆயுத விநியோகம்
இதன் காரணமாக, ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் மரணத்தையும் பட்டினியையும் எதிர்கொள்வார்கள் என்று ஐக்கிய நாடுகள் மன்றம் எச்சரித்துள்ளது.
இதனிடையே, ரஃபா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவின் ஆயுத விநியோகத்தை நிறுத்துவேன் என்று ஜோ பைடன் எச்சரித்திருந்தார். ஆனால், திட்டமிட்டபடியே தாக்குதலை முன்னெடுக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அமைச்சரவையும் முடிவு செய்துள்ளது.
மேலும், ரஃபா தொடர்பில் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்திருந்தாலும், ஆயுத விநியோகத்தை குறைக்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, இஸ்ரேல் இராணுவத்திற்கு எதிராக தாங்கள் போராடி வருவதாக ஹமாஸ் படைகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![கை, கால் விழுந்துவிட்டது உதவுங்கள் என கேட்ட பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ்... சிம்பு செய்த உதவி](https://cdn.ibcstack.com/article/9aceead0-ac34-468d-bf69-38332b725d7b/24-667bd041e1b1b-sm.webp)
கை, கால் விழுந்துவிட்டது உதவுங்கள் என கேட்ட பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ்... சிம்பு செய்த உதவி Cineulagam
![நந்தாவால் பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொண்ட ஆனந்தி, அன்பு செய்யப்போவது என்ன... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ](https://cdn.ibcstack.com/article/12fa161e-28cf-4889-a501-468564975e47/24-667bb29e87bb1-sm.webp)
நந்தாவால் பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொண்ட ஆனந்தி, அன்பு செய்யப்போவது என்ன... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
![பிரித்தானியாவில் பள்ளி சிறுமிகள் மரணம்: குற்றச்சாட்டு இன்றி தப்பித்த ஓட்டுநர்: குடும்பத்தினர் கடும் விமர்சனம்](https://cdn.ibcstack.com/article/e512d3e6-7bf9-4a32-80d1-cf8df1ebc6d1/24-667c4622b6acc-sm.webp)