நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய, வட-மத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
சிவப்பு எச்சரிக்கை
இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் வகையில், இந்த எச்சரிக்கையின்படி, 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 11 மாவட்டங்களுக்கு இளம் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே மின்னல் நடவடிக்கைகளால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த வகையில் இன்று மேற்கு, சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கு மேல் கனமழை பெய்யக்கூடும்.
எனவே, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கனமழை, பலத்த காற்று மற்றும் பலத்த மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஜே.கே. பாயின் நண்பரிடமிருந்து கசிந்த அதிர்ச்சியூட்டும் ஒலிப்பதிவு.. தக்ஸியின் முதல் கணவரும் சிறையில்!
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி News Lankasri
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri