இலங்கை 10 விளையாட்டு வீரர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
இங்கிலாந்தின் பேர்மிங்காமில் 2022 ஆண்டு நடைபெற்ற பொது நலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றதன் பின்னர் நாடு திரும்பத் தவறியதாகக் கூறப்படும் பத்து இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு கொழும்பு நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று வெளிநாட்டுப் பயணத் தடையை விதித்துள்ளார்.
இந்த நிலையில், விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்பு புலனாய்வுப் பிரிவின்படி, தலைமறைவான விளையாட்டு வீரர்கள் அரசுக்கு கிட்டத்தட்ட 50 மில்லியன் ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜே.கே. பாயின் நண்பரிடமிருந்து கசிந்த அதிர்ச்சியூட்டும் ஒலிப்பதிவு.. தக்ஸியின் முதல் கணவரும் சிறையில்!
பத்து நபர்களுக்கு எதிராக சிவப்பு அறிவிப்பு
இந்த பத்து நபர்களுக்கு எதிராக சிவப்பு அறிவிப்புகளை வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குற்றவியல் பிரிவு, நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இவர்கள், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த இங்கிலாந்துக்குச் சென்றதாகவும், ஆனால் நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை என்றும், நாடு திரும்பத் தவறிவிட்டதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதேவேளை, நாடு திரும்பாதவர்களில் மூன்று மல்யுத்த வீரர்கள், இரண்டு ஜூடோ வீரர்கள், இரண்டு குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் இரண்டு கரப்பந்து வீரர்கள் உள்ளடங்கியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



