டிட்வா புயலால் கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்ட நிலையில் 4789 குடும்பங்களைச் சேர்ந்த 15000க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 26 இடைக்கால முகாம்களில் 3700க்கு மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான சமைத்த உணவுகள் மற்றும் ஏனைய சுகாதார வசதிகள் அரசாங்கத்தின் சுற்று நிருபவங்களுக்கு அமைவாக பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவையாளர்கள் முன்னெடுத்த வருகின்றனர்.
இடைத்தங்கள் முகாம்
தற்பொழுதும் நாட்டின் சீரற்ற நிலைமைகள் காரணமாக தொடர்ச்சியாக இடைத்தங்கள் முகாம்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், இரணைமடு குளத்தின் நீர்மட்டமானது படிப்படியாக குறைந்து வருவதன் காரணமாக மேலதிக நீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அத்துடன் தற்பொழுது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதியே அதிகளவாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 11ஆம் கட்டை பகுதியில் அமைந்துள்ள பாலம் சேதமடைந்து காணப்படுவதன் காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது.
அதேபோன்று கிளிநொச்சி ஊடாக வட்டக்கச்சி செல்லும் பிரதான வீதியில் ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு அருகில் வீதியின் குறுக்கே பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக அவ்விதியும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri