யாழில் பல திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய சந்தேகநபர் கைது
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பல திருட்டு சம்பவங்களில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று(26) யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளான குப்பிளான் , புன்னாலைக்கட்டுவன் பகுதிகளில் அண்மைய நாட்களாக மின் மோட்டார்கள், துவிச்சக்கர வண்டிகள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் என்பன திருடப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை
இதன்படி யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கமைய குப்பிளான் கம்பம் புலம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 80 கிராம் ஹெரோயின், 7துவிச்சக்கர வண்டிகள், 4 மின் மோட்டார்கள் மற்றும் 2 எரிவாயு சிலிண்டர்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும், அவரிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்களையும்
புலனாய்வு பிரிவினர் மேலதிக நடவடிக்கைக்காக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 46 நிமிடங்கள் முன்

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
