சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் மோதல்
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதலில் 9 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
நேற்றைய தினம் (15.02.2023) இரவு பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த முதலாம் வருட முகாமைத்துவ பீட மாணவர்கள் குழுவிற்கும் பல்கலைக்கழக மாணவர் குழுவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளானதில் காயமடைந்த ஒன்பது மாணவர்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோதல் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேக நபர்களைக் கைது செய்ய சமனலவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த மோதல் சம்பவத்தில் சில மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கும், பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில்
இந்த சம்பவத்தில் காயமடைந்த 9 மாணவர்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri
