சமுர்த்தி கொடுப்பனவு திட்டத்தில் பல்வேறு குறைப்பாடுகள்: சிறிரங்கேஸ்வரன் விளக்கம் (Video)
நலன்புரி உதவி திட்டத்தில் பயனாளிகள் பட்டியலில் சில குறைபாடுகள் காணப்படுவதாக யாழ் மாவட்ட ஊடகப்பேச்சாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (27.06.2023) யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
குறிப்பாக யாழ் மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்களின் நலன்புரி உதவித்தொகை நீக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கின்றது.
சமுர்த்தி கொடுப்பனவு வழங்குவது தொடர்பான தரவுகள் கிரம உத்தியோகத்தரகளோ அல்லது சமுர்த்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்பு இல்லாமல் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக சேகரிக்கப்பட்டுள்ளன.
பாதிப்படைந்தவர்கள் பிரதேச செயலாளர்கள் அரசாங்க அதிபர்களிடம் முறைபாடுகளை மேற்கொண்டு நீதியான தீர்வை பெற முயற்சிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பான கருத்துக்களை கீழ்வரும் காணொளி உள்ளடக்கி வருகிறது.