யாழ். சுன்னாகத்தில் ஏழு பேர் கைது!
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்போது ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றும் (28) இன்றும் (29) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், மூவர் போதை மாத்திரைகளுடனும், இருவர் ஐஸ் போதைப்பொருளுடனும், இருவர் ஹெரோயின் போதைப் பொருளுடனும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணை
குறித்த நபர்களில் ஒருவர் 3 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் ஏற்கனவே 8 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 8 மணி நேரம் முன்
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan