சிஐடியில் முன்னிலையான கெஹலியவின் மகள்
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் அமலி ரம்புக்வெல்ல, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
அண்மையில், தனது கணக்கில் பெறப்பட்ட அனைத்து பணத்தையும் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் அமலி ரம்புக்வெல்ல பெற்றுக்கொண்டதாக கெஹலியவின் செயலாளர் நிஷாந்த பண்டார பஸ்நாயக்க தெரிவித்திருந்தார்.
விசாரணை நடவடிக்கைகள்
கடந்த 26ஆம் திகதி கொழும்பு தலைமை நீதிபதி தனுஜா லக்மாலி முன்னிலையில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இதனை குறிப்பிட்டது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் தனது பெயரில் ஒரு கணக்கு திறக்கப்பட்டிருந்தாலும், அந்தக் கணக்கிற்கான புத்தகம் உட்பட அனைத்தும் அமலி ரம்புக்வெல்லவிடம் இருந்ததாக பஸ்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் அமலி ரம்புக்வெல்ல விசாரணைகளுக்காக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri
