கெஹெலிய மகளுக்கு எதிராக வழக்கு! அரச சாட்சியாளராக மாறிய முக்கிய நபர்
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் நிஷாந்த பண்டார பஸ்நாயக்க அரச சாட்சியாளராக மாற ஒப்புக்கொண்டுள்ளார்.
கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் அமலி ரம்புக்வெல்லவி்ன் வங்கிக் கணக்கு தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.
கொழும்பு நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் சாட்சியம் வழங்கிய போதே இன்று (26) அவர் இதனை நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சந்தேக நபரைக் கைது செய்து கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
கெஹெலிய ரம்புக்வெல்ல
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, வெகுஜன ஊடகம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகப் பணியாற்றி, தனது தனிப்பட்ட ஊழியர்களில் பதினைந்து பேரை பெயரளவில் சேர்த்து, ஒரு மில்லியன் ரூபாய்க்கு மேல் சம்பாதித்து அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கில் நிஷாந்த பண்டார பஸ்நாயக கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள், நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்து, சந்தேக நபருக்கு கண்டி பகுதியில் ஒரு தனியார் வங்கிக் கணக்கு இருப்பதாகவும், அதை முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் அமலி ரம்புக்வெல்ல பயன்படுத்தியுள்ளார் என்றும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள், இந்தக் கணக்கில் அமைச்சக நிதி வரவு வைக்கப்பட்டுள்ளதாகக் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிரதிவாதியின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கை வைத்திருந்தாலும், அதை அமைச்சரின் மகள் பயன்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எனினும், தனியார் தரப்பினரிடமிருந்து கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதாகவும், ஆனால் அமைச்சக நிதி அதில் வரவு வைக்கப்படவில்லை என்றும் சட்டத்தரணி ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தக் கணக்கு தொடர்பான பரிவர்த்தனைகள் தனது கட்சிக்காரருக்குத் தெரியாமல் நடந்ததாகவும், அவர் தானாக முன்வந்து இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்குச் சென்று வாக்குமூலம் அளித்ததால், அவரை பிணையில் செல்ல அனுமதிக்க சட்டத்தரணி நீதிமன்றத்தை மேலும் கோரியிருந்தார்.
இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகள்
இருப்பினும், அந்த உண்மைகளை மறுத்த இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகள், சந்தேக நபரின் முழு அறிவுடனேயே தொடர்புடைய பணம் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட கணக்கில் வைப்பு மற்றும் திரும்பப் பெறுதல் தொடர்பான அனைத்து குறுஞ்செய்திகளும் சந்தேக நபரின் கையடக்க தொலைபேசிக்கு வந்ததாகவும், எனவே பரிவர்த்தனைகள் குறித்து அவருக்குத் தெரியாது என்ற சந்தேக நபரின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, விசாரணை இன்னும் முடிவடையாததால், சந்தேக நபரை பிணையில் விடுவிக்கப்பட்டால் சாட்சிகளை பாதிக்கும் அபாயம் இருப்பதால், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரப்பட்டது.
அதன்படி, உண்மைகளை பரிசீலித்த நீதவான், சந்தேக நபரை அடுத்த மாதம் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 1 நாள் முன்

Brain Teaser Maths: அதி புத்திசாலிகளுக்கு மட்டும் தெரிந்த புதிர் - உங்களால் தீர்க்க முடியுமா? Manithan

IQ Test: Time travel செய்து வந்தவர் யார்? 8 வினாடிகளில் 1% பேரால் மட்டுமே தீர்க்க முடியும்! Manithan

வலுவான ஆயுதங்களால் ரஷ்யாவை தாக்கலாம்... உக்ரைனுக்கு கட்டுப்பாடுகளை நீக்கிய மேற்கத்திய நாடுகள் News Lankasri
