யாழில் நான்கு பொலிஸார் உட்பட மேலும் ஏழு பேருக்கு கோவிட் தொற்று
யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 350 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போதே 7 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
இவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்கள். ஏனைய நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் கோவிட் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மறைத்துவைத்துள்ள கோடிக்கணக்கான பணம் - எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - வீழ்த்தப்பட்ட 8 அமெரிக்க தளங்கள்
ஹரக் கட்டா பணம் வழங்கிய பட்டியலில் பெரும் புள்ளிகளின் பெயர்கள்! இலங்கை வரலாற்றில் பதிவாகவுள்ள பெரும் சம்பவம்
கொளுத்தும் வெயில்... பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற பிரித்தானியப் பெற்றோர்கள் எடுத்த முடிவு News Lankasri