மட்டக்களப்பில் வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட 7 பேர் கைது
மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலைமீன்மடு 50 வீட்டுத் திட்டத்தில் வீடு ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் இரு பெண்கள் உட்பட 7 பேரை கைது செய்துள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சனிக்கிழமை (01) குறித்த பகுதியிலுள்ள மீன்பிடியில் ஈடுபட்டுவரும் இரு குழுவினர் மதுபானம் அருந்தியுள்ள நிலையில் ஏற்பட்ட வாய்த்தர்கம் சண்டையாக மாறியதையடுத்து, ஒருவர் படுகாயமடைந்ததுடன் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட நாகநாதன் நவநீதனின் வீடு இனம் தெரியாதோரால் தீக்கிரையக்கப்பட்டு வீடு முற்றாக எரிந்து சாம்பலாகியது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இரு பெண்கள் உட்பட 7 பேரை இன்று கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.





CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam

அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri
