இலங்கையிலிருந்து மேலும் ஏழு பேர் தமிழகத்தில் தஞ்சம் (Video)
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் ஏழு பேர் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுள்ளனர்.
இலங்கையிலிருந்து படகு மூலம் இரு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரே இவ்வாறு அகதிகளாக சென்றுள்ளனர்.
தஞ்சமடையும் இலங்கையர்
இவ்வாறு சென்றவர்களில் ஒரு ஆண், இரண்டு பெண்கள், 4 குழந்தைகள் உள்ளடங்குகின்றனர்.
இவர்கள் 7 பேரையும் ஏற்றிச் சென்ற படகு, இந்தியாவின் தமிழகம் - தனுஷ்கோடி ஒன்றாம் தீடையில் இறக்கிய பின்பு திரும்பி சென்றுள்ளது.
தீடை பகுதியில் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்துள்ளதாக மரைன் பொலிஸார் கிடைத்த தகவல் அடிப்படையில் விரைந்து சென்ற பொலிஸார் அவர்களை மீட்டு விசாரணைக்காக மண்டபம் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து விசாரணை முடிந்த பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட உள்ளனர்.
இவ்வாறு தஞ்சமடைந்துள்ளவர்கள் வடக்கு மற்றும் திருகோணமலை பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது,

இலங்கை ஜனாதிபதிக்கு சீன அமைச்சர் ஓதும் வேதம்..! 17 மணி நேரம் முன்

14 ஆண்டு வரலாறுக்கு முடிவுரை: அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா! News Lankasri

Ethirneechal: பிச்சைக்காரன் என்று அசிங்கப்படுத்தப்பட்ட சக்தி... அறிவுக்கரசியின் அடுத்த திட்டம் Manithan
