சம்மளங்குளத்தில் அடாவடித்தனமாக கற்குவாரி அமைக்க முயற்சி!ரவிகரன் எம்.பி விடுத்துள்ள எச்சரிக்கை
மக்களின் விருப்பிற்கு மாறாக காதாலியார்-சம்மளங்குளத்தில் கற்குவாரி அமைக்கப்பட்டால் மக்களோடு இணைந்து பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அந்தப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையிடப்பட்டது.
இந்தநிலையில் குறித்த பகுதிக்கு இன்று (02.01.2026) நாடாளுமன்ற உறுப்பினர் நேரடியாகச் சென்று நிலமைகளை ஆராய்ந்த பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
களவிஜயம்
குறித்த களவிஜயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காதலியார்- சம்மளங்குளம் பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு கற்குவாரி ஒன்றினை அமைத்து, பாறைகளை வெடிவைத்து தகர்த்து அகழ்வுசெய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கிராமமக்களின் எதிர்ப்பினால் குறித்த கற்குவாரி கடந்த 2022ஆம் ஆண்டு மூடப்பட்டதாகவும் அப்பகுதி மக்களால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் குறித்த பகுதியில் கற்குவாரி ஒன்றினை அமைந்து, கற்களை அகழ்வதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மக்களால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தப்பட்டது.
கோரிக்கை
எனவே தமது கிராமத்திற்கு பல்வேறு வழிகளிலும் பாதிப்பாக அமைகின்ற கற்குவாரியை, மீண்டும் தமது கிராமத்தில் அமைக்க எடுக்கப்படுகின்ற முயற்சியைத் தடுத்து நிறுத்துமாறும் இதன்போது கிராமமக்களால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் மக்களின் முறையீடுகளை நன்கு செவிமடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஒட்டுசுட்டான் பிரதேச செயலருக்கு தொலைபேசி அழைப்பெடுத்து கலந்துரையாடினார்.
அந்தவகையில் கற்குவாரியின் பாதிப்பு நிலமைகளை ஒட்டுசுட்டான் பிரதேசசெயலரிடம் சுட்டிக்காட்டினார்.
தடுப்பதற்கு நடவடிக்கை
அத்தோடு ஏற்கனவே கடந்த ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக காதலியார்-சம்மளங்குளம் கிராமத்தில் கற்குவாரி அமைக்க அனுமதி வழங்கப்படக்கூடாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பிரதேசசெயலாளரிடம் வலியுறுத்தினார்.

அத்தோடு கற்குவாரி அமைக்க அனுமதி வழங்கப்படமாட்டாதெனவும் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் உரிய இடங்களில் கலந்துரையாடுவதுடன், மக்களுக்கு பாதிப்பான இந்த கற்குவாரி அமைப்பதற்கு எடுக்கப்படுகின்ற முயற்சியை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 4 மணி நேரம் முன்
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan