வழமைக்கு திரும்பவுள்ள சேவைகள்: ஜனாதிபதி நடவடிக்கை- செய்திகளின் தொகுப்பு
தற்போதைக்கு முடங்கி போயுள்ள அரச நிர்வாகத்தை வழமைக்கு கொண்டுவரும் முயற்சிகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.
அதன் பிரகாரம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரசாங்கத்தின் நிர்வாக செயற்பாடுகள் வழமைக்கு திரும்ப வேண்டும் என்று அனைத்து திணைக்கள தலைவர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்க நிறுவனங்கள் வழமை போன்று இயங்கும் நிலையை உருவாக்கவும், பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளித்து செயற்படவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிவில் நிர்வாகத்தை பலப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒழுங்கமைக்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,