அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு (Azath Salley) எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திாிகை கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த வருட ஆரம்பத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து இலங்கையின் சட்டம் தொடர்பில் சர்ச்சைக்குாிய கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பிலேயே இந்தக் குற்றப்பத்திாிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிமன்றில் நீதிபதி அமல் ரட்னராஜா முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரான அசாத் சாலி, சக்கர நாற்காலியின் மூலம் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்தே அவருக்கு எதிராக சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அன்றையதினம் சாட்சிகளை மன்றில் முன்னிலையாகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதியன்று பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
