பாரதூரமான பொருளாதார நெருக்கடியில் இலங்கை: கடினமான தீர்மானங்களை எடுக்க நேரிடும் - அரசாங்கம் தகவல்
நாட்டின் பொருளாதார நெருக்கடி பாரதூரமான நிலைமையில் இருப்பதால், எதிர்வரும் காலங்களில் கடினமான சில தீர்மானங்களை எடுக்க நேரிடும் என பெருந்தோட்டத் தொழிற்துறை அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ரமேஷ் பத்திரன (Dr.Ramesh Pathirana) தெரிவித்துள்ளார்.
சுமார் இரண்டு வருடங்களாக எமது நாட்டுக்கு கிடைக்க வேண்டிய டொலர் வருமானம் குறைந்ததன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில், சர்வதேச நாணயத்திடம் செல்வது சம்பந்தமான அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை. இது சம்பந்தமான இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
தொடர்ந்தும் கடனை பெற்றுக்கொள்ளும் எண்ணம் அரசாங்கத்திற்கு இருக்கவில்லை என்றாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடு எதிர்நோக்கிய நிலைமையில் அடிப்படையில், சிரமமான நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.