பாகிஸ்தானில் பொலிஸ் சாவடி மீது ட்ரோன் தாக்குதல்: 11 பொலிஸ் அதிகாரிகள் பலி
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் உள்ள ஒரு பொலிஸ் சாவடி மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் குறைந்தது 11 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 28 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று(29.07.2026) இரவு நிகழ்ந்த இந்த தாக்குதலின் போது, தாக்குதலாளர்கள் முதலில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட “ட்ரோன்” விமானங்களைப் பயன்படுத்தி பொலிஸ் சாவடியைத் தாக்கியுள்ளனர்.
இனப்படுகொலை தடயங்களை அழித்துவிட்டு இளையோரை வரலாறு தெரியாதவர்கள் என விமர்சிப்பது அபத்தம் - பொ. ஐங்கரநேசன் காட்டம்
11 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழப்பு
இதனைத் தொடர்ந்து, சாவடியைச் சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பல மணி நேரப் பதிலடித் தாக்குதலில், தாக்குதல் நடத்தியவர்களில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், சம்பவ இடத்திற்கு கூடுதல் படைகளுடன் விரைந்த உதவி பொலிஸ் அத்தியாட்சகர் தியார் கான் உட்பட 11 பொலிஸார் இந்த மோதலில் உயிரிழந்துள்ளனர்.

தாக்குதலாளர்கள் மூன்று பொலிஸ் வாகனங்களுக்குத் தீ வைத்ததுடன், மற்றொரு பொலிஸ் வாகனத்தைக் கடத்திச் சென்றுள்ளதாக மாவட்ட பொலிஸ் அதிகாரி முஜாஹித் ஹுசைன் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை.
இருப்பினும், சமீபகாலமாக ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் மற்றும் பொலிஸாரைக் குறிவைத்துத் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.
எல்லையோரப் பகுதிகளில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளே இதன் பின்னணியில் இருப்பதாக பாகிஸ்தான் சந்தேகம் எழுந்துள்ளன.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 3 மணி நேரம் முன்
லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட் News Lankasri
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri