இனப்படுகொலை தடயங்களை அழித்துவிட்டு இளையோரை வரலாறு தெரியாதவர்கள் என விமர்சிப்பது அபத்தம் - பொ. ஐங்கரநேசன் காட்டம்
"இளைய தலைமுறை தமிழ்த் தேசிய அரசியலுடன் இல்லை அவர்களுக்கு எமது போராட்டத்தின் வரலாறும், நாம் பட்ட வதைகளும் வலியும் தெரியாது" என இளைய தலைமுறை மீது நாம் குற்றம் சுமத்தி வருகிறோம், அவர்களை வரலாறு தெரியாதவர்களாக ஆக்கியது யார்? நாமல்லவா? தமிழ் இனப்படுகொலையின் வரலாற்றுத் தடயங்களை நாமே மூடி மறைத்துக் குழிதோண்டிப் புதைத்து அழித்துவிட்டு இளையோரை வரலாறு தெரியாதவர்கள் என்று விமர்சிப்பது பெருத்த அபத்தம் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு நேற்று (29.07.2026) கொக்குவில் அறிவாலய மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஈழத்தமிழர்களின் அறிவுக் கருவூலமாகத் திகழ்ந்த தென்னாசியாவின் மிகப்பெரும் நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாணப் பொதுநூலகம் 1981ஆம் ஆண்டு எரியூட்டி அழிக்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் பாரம்பரியத்தை விளக்கும், வேறு எங்கும் காணக்கிடைக்காத வரலாற்று ஆவணங்களும் ஓலைச்சுவடிகளும் தீக்கு இரையாக்கப்பட்டன.
வரலாற்றுப் பிழை
இந்த நாசகாரியத்தை தென்னிலங்கை அரசியல்வாதிகளின் மேற்பார்வையில் அரச படைகளே அரங்கேற்றியது. நமது வரலாற்றில் நாம் சந்தித்த மிகப்பெரும் பண்பாட்டுப் படுகொலை இது. ஒரு வரலாற்றுக் கடத்தியாக எரியுண்ட நூலகத்தை அதே நிலையில் நாம் பேணிப்பாதுகாத்திருக்க வேண்டும். ஆனால், ஒரு வரலாற்றுத் தவறாக நூலகத்தைப் புனரமைத்து நடந்தது எதுவுமே தெரியாதவாறு வெள்ளையடித்து பேரினவாத அரசைப் பாதுகாக்கும் வரலாற்றுப் பிழையையே நாம் இழைத்தோம்.
இலங்கையில் தமிழினம் மீது 1956 இல் நிகழ்த்தப்பட்ட கல்லோயாப் படுகொலை தொடங்கி 2009 இல் நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலைவரை பல தடவைகள் இனவழிப்புக்கு ஆளாகியுள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு முன்பாக, 1983இல் நிகழ்த்தப்பட்ட 'கறுப்பு ஜீலை' தமிழினப்படுகொலையே அதிகூடிய எண்ணிக்கையான உயிரிழப்புகளையும், பலகோடிப்பெறுமதியில் சொத்திழப்புகளையும் ஏற்ப்படுத்திய முதலாவது இனப்படுகொலையாகும். இதுவே உலகின் மூலைமுடுக்கெல்லாம் தமிழ் மக்களை எதிலிகளாக இடம்பெயரவைத்த முதலாவது படுகொலையுமாகும்.
செம்மணிப் புதைகுழி
ஆனால் இவற்றையெல்லாவற்றையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லக்கூடிய நினைவுச் சின்னங்களை இதுவரையில் நாம் அமைக்க முற்படாததும் பெரும் வரலாற்றுத் தவறே. செம்மணிப் புதைகுழியிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் எலும்புக்கூடுகளுக்கும் நாளை இதே நிலை ஏற்பட்டுவிக்கூடாது. இனப்படுகொலைக்கு ஆளான ஒரு சமூகம் வரலாற்றை நினைவுகூரும் விதமாகச் சின்னங்களை, நிறுவுவது இன்றியமையாதது.
இவை' வெறுமனே அழுது அரற்றி மனதை ஆற்றுவதற்கான இடங்கள் அல்ல. அடுத்த தலைமுறைகளுக்குக் கடந்தகால உண்மைகளைக் கடத்துகின்ற வரலாற்றுப் பாடசாலைகளாகவும் உள்ளன. நீதிக்கான தொடர் போராட்டங்களின் எரிசக்தியாகவும் இவை விளங்குகின்றன. ஒரு பொது வெளியில் எழுப்பப்படும் நினைவாலயம் குற்றவாளிகள் தங்களை நியாயப்படுத்திக் கொள்வதைத் தடுத்து அவர்கள் மீதான பொறுப்புக்கூறலைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கும்.
கொழும்பு உட்பட நாடு முழுவதுமுள்ள இளைஞர், யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - வெளியான அதிர்ச்சித் தகவல்
இந்த முக்கியத்துவங்களைக் கருத்திற்கொண்டு இனவழிப்பின் தடயங்களை முக்கியத்து நினைவுச்சின்னங்களாகவோ, நினைவு வளாகமாகவோ, ஓர் ஆவணக்காப்பகமாகவோ பேணிப்பாதுகாக்க இனிமேலாவது முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.





கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 4 மணி நேரம் முன்
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட் News Lankasri