எரிபொருள் விலைகளில் மாற்றம்! அடுத்தடுத்து வெளியாகவுள்ள அறிவிப்பு
நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் நேற்று (30) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்
இதன்படி இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், 414 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெட்ரோல் லீற்றரின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 399 ரூபாவாகும்.

அத்துடன் 495 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 475 ரூபாவாகும்.
ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அறிவித்திருந்துள்ளது.
லங்கா ஐஓசி நிறுவன விலை திருத்தம்
இந்த விலை திருத்தத்தினையடுத்து லங்கா ஐஓசி நிறுவனம், ஒரு லீற்றர் ஒக்டென் 92 பெட்ரோலின் விலை 15 ரூபாவினால் குறைத்து, அதன் புதிய விலை 399 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.
ஒக்டென் 95 பெட்ரோலின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 475 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் அறிவித்துள்ளது.
இதற்கமைய, பாடசாலை பேருந்து கட்டணம், முச்சக்கரவண்டி கட்டணம், எரிவாயு விலை போன்றவற்றில் அடுத்தடுத்து திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.