பௌத்த சாசனத்துக்கு தனியான கெபினட் அமைச்சு: சஜித் கோரிக்கை
பௌத்த சாசனத்துக்குத் தனியான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியொன்றை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
அநுராதபுரம் தந்திரிமலை விகாரையின் சமயநிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் கருத்து வெளியிடும்போது சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு
அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாகும்.
அதன் காரணமாகத்தான் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்காக தனியான நிதியம் ஒன்றை உருவாக்கியிருந்தார்.
அந்தவகையில் பௌத்த சாசனத்துக்கு என்று தனியான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
அதே போன்று முன்னர் இருந்ததைப் போன்று ஏனைய மதங்களுக்குப் பொறுப்பாக ராஜாங்க அமைச்சுக்களை மீண்டும் உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




