செந்தில் தொண்டமான் - எம்.எஸ்.தௌபீக் சந்திப்பு: அபிவிருத்தி பிரச்சினைகள் குறித்து பேச்சு(Photos)
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் கொழும்பில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயமான சௌமிய பவனில் இன்றைய தினம் (06.06.2023) நடைபெற்றுள்ளது.
இதன்போது, அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றக்கூடிய ஒருவர் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியான விடயம் எனவும் அவரை மக்கள் முழுமையாக ஆதரிப்பதாவும் நாடாளுமன்ற உறுப்பினர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

விரிவான கலந்துரையாடல்
இச்சந்திப்பில், கிழக்கு மாகாண அபிவிருத்தி, மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, காணிப் பிரச்சினை, வெளிநாட்டு முதலீடுகள் சம்பந்தமாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் இந்த கலந்துரையாடலின்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரனும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |


பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri
நிம்மதியாக இருக்க கொடைக்கானல் சென்ற ஜனனி தேடிவந்த ஆபத்து... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam