கிழக்கு மாகாண ஆளுநராக தமிழர்! வடக்கு உட்பட பல மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள்
ஆளுநர் பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தேசித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி புதிய ஆளுநர்கள் சிலரை நியமிக்கவுள்ளார் என கூறப்படுகின்றது.
இதன்போது, கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்படவுள்ளார்.
ஆளுநர் பதவி
அத்துடன், மத்திய மாகாண ஆளுநர் பதவி முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்கவுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதன் பின்னர் ஏனைய மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
எனினும், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் தற்போதைய ஆளுநர் பதவி
வகிப்பவர்கள் அப்பதவியில் நீடிப்பார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
