ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகச் சிறந்த தலைவர்! அலி சப்ரி புகழாரம்
"ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாடு பல்வேறு துறைகளில் மறுமலர்ச்சி அடைந்தே தீரும்" என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் கூறுகையில்,
மிகச் சிறந்த தலைவர் ரணில்
"இப்போதிருக்கின்ற தலைவர்களுள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகச் சிறந்த தலைவர்.

அவரது வேலைத்திட்டங்களைப் பூர்த்தி செய்வதற்குச் சில காலம் வழங்கப்பட வேண்டும். நான் இருக்கின்ற முகாமை விட்டுப் போகின்றவன் அல்லன்.
எமது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே ரணிலை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தது. நான் இதற்கு முன் அவருக்கு எதிராகவே வேலை செய்தேன். இப்போதுதான் அவருடன் இணைந்து செயலாற்றும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
அவர் பற்றி நாம் தவறாகப் புரிந்து வைத்திருந்தோம் என்பது அவருடன் இப்போது இணைந்து செயலாற்றும் போது புரிகின்றது.
பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு, வெளிவிவகார கொள்கை போன்றவற்றில் ஜனாதிபதி
ரணிலுக்கு விரிவான அறிவு உண்டு." என்றார்.
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri