கிழக்கு மாகாண ஆளுநர் - கல்வி அமைச்சர் சந்திப்பு: ஆசிரியர் பற்றாக்குறை குறித்து பேச்சு
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பு கல்வி அமைச்சில் நேற்று (30.05.2023) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது கிழக்கு மாகாணத்திற்கு ஆசிரியர் பற்றாக்குறை என்பது மிகப்பெரும் சவாலாக உள்ளது. அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது தொடர்பாகக் கிழக்கு மாகாண ஆளுநர் கல்வி அமைச்சரிடம் கோரிக்கையாக விடுத்துள்ளார்.
500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்
ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முதற்கட்டமாக எதிர்வரும் கிழமைக்குள் கிழக்கு மாகாணத்தில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களைச் சேவையில் இணைத்துக்கொள்வதுடன், மீதிப் பற்றாக்குறையை மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் நிரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் கல்வி அமைச்சின் செயலாளர்,மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
