கிழக்கு மாகாண ஆளுநர் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் (PHOTOS
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல் ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (23.05.2023) நடைபெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆணையாளர் ஆயுர்வேத திணைக்களம் மற்றும் பணிப்பாளர், சமூக சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கலந்துரையாடலில் மாகாண சுகாதார அமைச்சின் கீழான நிறுவனங்கள் தொடர்பான பொதுவான அறிமுகமும், அடிப்படை செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தின் சுகாதாரக் கட்டமைப்பில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மாகாண சுகாதார திணைக்களம் மற்றும் பணிப்பாளர், சமூக சேவைகள் திணைக்களம் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு,
1.விசேட தேவை உடையவர்களுக்கு தேவையான உபகரணங்களை உடன் வழங்க தனியார் நிறுவனங்களின் உதவிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
2. குறைந்த உதவித்தொகை பெறுவதற்கான ஆகக்குறைந்த மாதாந்த வருமான 6000.00 ரூபாவை 10,000.00 ஆக உடன் மாற்றியமைக்குமாறும் அதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டது.
3. ஒவ்வொரு வாரமும் திருக்கோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்திலும் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வைத்திய முகாம்களை நாடத்துமாரும் அதற்கான பட்டியலை ஒரு வார காலத்துள் தனக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
4. கல்வித் திணைக்களம் மற்றும் சுகாதாரத் திணைக்களம் என்பவற்றின் உதவியுடன் விசேட தேவையுடைய சிறார்கள் தொடர்பான தகவல்களை குறிப்பாக கற்புல செவிப்புல குறைபாடுள்ள பிள்ளைகளின் தகவல்களை பெற்று அது தொடர்பான அறிக்கையொன்றினை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கவும்.
5. அரசினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்க் 5000 வழங்கும் செயற்றிட்டம் தொடர்பான தகவல்களை 3 மாவட்ட செயலாளர்களிடம் இருந்து பெறுமாறு பணிப்பாளருக்கு ஆளுநரால் பணிப்புரை வழங்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |











விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam
