மட்டக்களப்பு அரச வைத்தியசாலைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட கிழக்கு ஆளுநர்
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்துள்ளார்
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி, ஆரயம்பதி, கோரைத்தீவுப்பற்று ஆகிய வைத்தியசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்ட அவர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுடன் அங்கு காணப்படும் அவசர தேவைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
மேலும், அங்குள்ள நோயாளிகளிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை திருப்தி அளிக்கிறதா என்பதையும் கேட்டறிந்துள்ளார்.
வைத்தியசாலைகளின் பிரச்சினைகள்
அத்துடன், வைத்தியசாலைகளில் காணப்படும் பிரச்சினைகளை கேட்டறிந்த ஆளுநர், அதற்கான தீர்வினை வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |