காஸா குழந்தைகள் நிதியத்திற்கு நன்கொடை வழங்கிய முதல் அரசியல் தலைமை
ஜனாதிபதி காஸா நிதியத்திற்கு, கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் 05 இலட்சம் ரூபா நிதியை வழங்கியுள்ளார்.
இந்த நிதியத்துக்கு வர்த்தகர்கள், பொது அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினரும் உதவிகளை வழங்கிவரும் நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முதல் அரசியல் தலைமையாக இந்நிதியை வழங்கியுள்ளார்.
குழந்தைகளின் நலன்புரி தேவை
இந்த காஸா குழந்தைகள் நிதியம், காஸாவில் இடம்பெற்றுவரும் மோதல்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இப்தார் மாதத்தில் நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கமைய காஸா குழந்தைகள் நிதியத்துக்கு இதுவரை 57 இலட்சத்து 73 ஆயிரத்து 512 ரூபா நன்கொடையாக கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த நிதி விரைவில் காஸாவில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் நலன்புரி தேவைகளுக்காக இலங்கை அரசாங்கத்தால் அனுப்பிவைக்கப்பட உள்ளது.
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam