நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட செந்தில் தொண்டமான்
இலங்கையில் பிறந்த நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் கம்சி குணரத்தினம் மற்றும் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் ஹிமான்ஷு குலாட்டி ஆகியோருடன் இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கும் நோர்வேக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடன் விசேட கலந்துரையாடலொன்றை செந்தில் தொண்டமான் மேற்கொண்டுள்ளார்.
சாதகமான கருத்துக்கள்
இதன் போது நோர்வே அரசாங்கம் செய்து வரும் நல்ல பணிகளைப் பாராட்டுவதுடன், பாலின சமத்துவம் தொடர்பில் உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கம்சி குணரத்தினம் அவர்களின் கருத்துக்களுக்கு வலுவாக ஆதரவளிப்பதாகவும், கிழக்கு மாகாண சபையின் சார்பாக நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர்களால் மட்டக்களப்பு மாநகர சபை சம்பந்தமாக சாதகமான கருத்துக்களைக் கேட்டதில் மகிழ்ச்சியடைவதாகவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையின் பெருந்தோட்ட சமூகத்தின் 200 ஆவது வருடத்தின் முதல் நினைவு முத்திரையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்ததோடு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இலங்கைக்கு வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் புவி வெப்பமடைதல் தொடர்பான திட்டங்களுடன் இலங்கைக்கு உதவ ஹிமான்ஷு ஒப்புக்கொண்டுள்ளதுடன், ஸ்திரத்தன்மையை உருவாக்க கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தில் அதிக தொழில் வலயங்களை நிறுவுவதற்கு ஊக்குவிப்பதாகவும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOINNOW |