மோடிக்கு வாழ்த்து தெரிவித்த செந்தில் தொண்டமான்
இந்தியாவின் மக்களைவை தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெற்று, மூன்றாவது முறையும் ஆட்சி அமைத்துள்ளமைக்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்திய மக்களுக்காக பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொருளாதார ரீதியில் வலுவான ஒருநாடாக கட்டி அமைத்துள்ளார்.
இலங்கைக்கு வாழ்வாதார உதவிகள்
அத போல் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது இந்திய அரசு, கடன் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி இலங்கைக்கு கைக்கொடுத்து வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளது.
இன்று இந்தியாவில் 3வது முறையாக ஆட்சி அமைத்து மீண்டும் அதிகாரத்தில் அமர்கிறார்.
பிரதமர் நரேந்திரமோடி. உலகத்தின் வலிமை மிக்க தலைவராகவும் மாறியுள்ளார் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சார்பாக தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
