வாழைச்சேனை பகுதியில் பரபரப்புச் சம்பவம் : வாக்குவாதத்தில் ஈடுபட்ட வைத்தியர்
வாழைச்சேனைப் பகுதியில் நபர் ஒருவர் அவசர சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்கு சென்ற சந்தர்ப்பத்தில் பொறுப்பான வைத்தியர் அலட்சியமாக பதிலளிக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த பகுதியில் வசிக்கும் நபரொருவர் தனது கையில் ஏற்பட்ட முறிவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக குறித்த வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.
வெகு நேரமாக சிகிச்சைக்காக காத்திருந்தும் மருத்துவர் சிகிச்சை அளிக்காத காரணத்தினால் மருத்துவரிடம் வினவியபோது மருத்துவர் அலட்சியமாக பதிலளித்துள்ளார்.
மருத்துவர் இவ்வாறு அலட்சியமாக பதிலளிக்கும் காணொளியை சிகிச்சைக்காக சென்ற நபரின் நண்பர் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண் மருத்துவரின் அலட்சியமான நடவடிக்கை காரணமாக சிகிச்சைகளுக்காக வருகை தந்த நபர் தான் வேறொரு வைத்தியசாலைக்கு செல்வதாக கூறி விட்டு வெளியேறியுள்ளார்.
இது தொடர்பான காணொளி வருமாறு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



