யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பிஐயா கலாமணி காலமானார்
யாழ். வடமராட்சி பிரதேச கல்வி புலமையாளர்களில் ஒருவரான யாழ். பல்கலைக்கழக கல்வித்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்பிஐயா கலாமணி தனது 72ஆவது வயதில் காலமானார்.
கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று (10.2.2024) காலமானார்.
அல்வாய் தெற்கைச் சேர்ந்த அன்னார் ஆரம்ப கல்வியை வதிரி தேவரையாளி இந்து கல்லூரியிலும் இடைநிலை கல்வியை நெல்லியடி மத்திய கல்லூரியிலும் கற்று யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு கலைப்பட்டதாரியானார்.
நீண்ட கால சுகயீனம்
இதனைத் தொடர்ந்து, யாழ். பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராக இணைந்து கலைப்பீட விரிவுரையாளரானார்.

மேலும், உயர் கற்கைகளை மேற்கொண்டு கலாநிதி பட்டத்தை பெற்றுக் கொண்ட அவர் யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வியியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.
கலை இலக்கிய துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் காத்தவராயன் உள்ளிட்ட பல இதிகாச புராண நாடகங்களை தயாரித்தும் நடித்தும் மேடையேற்றியுள்ளார்.
மேலும், அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை அவரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 5 மணி நேரம் முன்
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்: அரசு வெளியிட்ட புகைப்படங்கள் News Lankasri