நாட்டை விட்டு தப்பி ஓடிய CIDயின் சிரேஷ்ட அதிகாரி
இலங்கை உள்நாட்டு போரின் இறுதி கட்டத்தில் இராணுவத்தினரால் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் தொடர்பிலான வழக்கை விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவானுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
குறித்த கடத்தல் தொடர்பில் விசாரணை செய்தவர்களில் முக்கியமானவர்கள், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரிகளான ஷானி அபேசேகர மற்றும் நிஷாந்த டீ சில்வா ஆகியோர் ஆவர்.
இதில், நிஷாந்த டீ சில்வா நாட்டை விட்டு வெளியேறி சுவிற்சர்லாந்தில் அகதித் தஞ்சம் கோரியுள்ளார்.
இந்நிலையில், அவர் நாட்டில் இருந்திருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பாரா என்பதே கேள்விக்குறியாகி இருக்கும் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        