அர்ச்சுனாவை வைத்தியசாலைக்கு அனுப்புங்கள்: அமைச்சர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
இராமநாதன் அர்ச்சுனாவை (Ramanathan Archchuna) வைத்தியசாலைக்கு சென்று மூளையை பரிசோதனை செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் (M.L.A.M. Hizbullah) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (10) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவித அடிப்படையும் தெரியாமல் முஸ்லிம் விவாக - விவகாரத்து தொடர்பில் பிழையான கருத்தை அர்ச்சுனா நாடாளுமன்றில் முன் வைத்துள்ளார்.
இந்த விடயமானது தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையிலேயே நாடாளுமன்ற உறுப்பினருக்கு மூளைக்கோளாறு இருக்கின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.
அர்ச்சுனாவிற்கு நாடாளுமன்றில் பேச்சுக்கள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா முஸ்லிம் விவாக - விவகாரத்து தொடர்பில் முன்வைத்த கருத்தை மீளப் பெற வேண்டு்ம் என நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த அர்ச்சுனா முஸ்லிம் மதம் என்பது வளர்ந்து வருகின்ற மதம்.அந்த மதத்தில் மாற்றங்கள் எதையும் ஏற்படுத்த நான் முயற்சிக்கவில்லை.
அத்தோடு, எந்த மதத்தையும் நிந்திக்கும் வகையிலும் நான் செயற்படவில்லை என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

46 வயதில் கர்ப்பம்: வயிற்றில் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட சங்கீதா- குவியும் வாழ்த்துக்கள் Manithan

குட் பேட் அக்லி படத்தின் முதல் காட்சி எப்போது தெரியுமா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் Cineulagam
