அமெரிக்க எப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளி நியமனம்: செனட் சபை ஒப்புதல்
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை(kash-patel) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியமனம் செய்துள்ளார். அவரது நியமனத்திற்கு ஜனநாயகக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) வெற்றி பெற்றதும் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகின்றார்.
ட்ரம்பின் முடிவு
தனது புதிய அரசில் இடம்பெறவிருக்கும் அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்தை கொண்ட முக்கிய அதிகாரிகளை அவர் அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியமனம் செய்துள்ளார். அவரது நியமனத்திற்கு ஜனநாயகக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை உறுதிசெய்துள்ளது.
அதன்படி 51-49 என்ற வாக்குகளின் அடிப்படையில் அவரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்ட்டுள்ளது.
இதுவரை ட்ரம்பின் அனைத்து அமைச்சரவை தேர்வுகளுக்கும் அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய வம்சாவளி
கடந்த 2016இல் நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீட்டை வெளிக்கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தகாஷ் படேல், ட்ரம்பின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Congratulations to the new Director of the FBI, @Kash_Patel! pic.twitter.com/JsANV0s9cP
— Dan Scavino (@Scavino47) February 20, 2025
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் உதவியாளரும் வெள்ளை மாளிகையின் துணைத் தலைவருமான டான் ஸ்கேவினோ, காஷ் படேலை FBI இயக்குநராக உறுதி செய்த பிறகு வாழ்த்த போலிவுட் மீம் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த மீம்ஸில் ரன்வீர் சிங் நடித்த 'பாஜிராவ் மஸ்தானி' திரைப்படத்தின் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கிறது.
தனது நியமனம் குறித்து பேசியிருந்த காஸ் படேல், "வெளிப்படையான, பொறுப்புணர்வுள்ள மற்றும் நீதியை உறுதி செய்யும் ஒரு FBI ஐ பெற அமெரிக்க மக்கள் தகுதியானார்கள்" என்று தெரிவித்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |