கொழும்பு-கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு - தமிழர் ஒருவர் படுகொலை
புதிய இணைப்பு
கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரான சசிகுமார் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
T-56 துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான துப்பாக்கிதாரி உந்துருளியில் தப்பிச்சென்ற வேளை ஒருகொடவத்தையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் தலவாக்கலை, பேவல் தோட்டத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
முதலாம் இணைப்பு
சற்றுமுன் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்துள்ளதுடன் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









