அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்திய சிறைச்சாலைகள் விவகாரம்.. முக்கிய பொறுப்பேற்கும் அதிகாரி
சிறைச்சாலைகள் ஆணையாளர் செனக பல்லெதென்ன, சிறைச்சாலைத் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் இன்று (09) முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் இதற்கு முன்னர் மஹர சிறைச்சாலைகளின் கண்காணிப்பாளராகவும் பயிற்சி பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
கல்வித் தகைமை
செனக பல்லெதென்ன, காலி ரிச்மண்ட் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.

கொழும்புப் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்த பட்டயப் படிப்பையும் அவர் நிறைவு செய்துள்ளார்.
அவர் இந்தியாவின் கேரளாவில் சீர்திருத்தம் மற்றும் சீர்திருத்த மேலாண்மை குறித்த பட்டயப் படிப்பையும், இந்தியா, தாய்லாந்து, மலேசியா, மாலத்தீவுகள் மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்த பல பட்டயப் படிப்புகளையும் நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan