ஈழ மண்ணின் உண்மையான பயங்கரவாதிகள் யார்! இந்தியாவிலிருந்து ஒலித்த குரல்

Sri Lankan Tamils India Tamil chemmani mass graves jaffna
By Kajinthan Jul 01, 2025 12:00 PM GMT
Report

எமது ஈழ மண்ணின் உண்மையான பயங்கரவாதிகள் யார் என்பதை யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியானது இவ்வுலகிற்கு பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்தி விட்டது என்று தென்னிந்திய இயக்குனரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனருமாகிய வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

குறித்த மனிதப் புதைகுழியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட எம் உறவுகளது எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படுகின்ற சம்பவமானது பேரதிர்ச்சியையும் கடந்தகால சிங்கள அரசுகளின் கோர முகங்களையும் எடுத்துக் காட்டுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

உயர் பதவிகளில் இருக்கும் செம்மணி படுகொலையாளிகள் ..

உயர் பதவிகளில் இருக்கும் செம்மணி படுகொலையாளிகள் ..

கொடூர கொலை 

ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஈழ மண்ணின் உண்மையான பயங்கரவாதிகள் யார்! இந்தியாவிலிருந்து ஒலித்த குரல் | Semmani Pudhaikuli Director Gowthaman Speech

அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இரண்டாவது கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. நேற்று வரையான (30) அகழ்வுகளின்போது 33 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட பல எலும்புக்கூடுகள் கொடூர கொலை இடம்பெற்றதை ஆதாரப்படுத்துகின்றது.

அதாவது தாய் ஒருவர் சேயை அணைத்தவாறு ஒரு எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.அத்துடன் சிறுவன் ஒருவனது எலும்புக்கூடானது புத்தகப் பையுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஆதாரங்களானது கடந்தகால அரசுகளின் கோர முகத்தை வெளிப்படுத்துகிறது.குறித்த மயானமானது எரியூட்டப்படும் மயானமாகவே காணப்படுகிறது.

செம்மணியில் சுமதியின் எலும்புக்கூட்டைக் கண்டதும் கதறியழுத தாய்

செம்மணியில் சுமதியின் எலும்புக்கூட்டைக் கண்டதும் கதறியழுத தாய்

பயங்கரவாதிகள்

இறந்தவர்களது உடல்கள் பொதுமக்களால் அங்கு புதைக்கப்படுவதில்லை.

ஈழ மண்ணின் உண்மையான பயங்கரவாதிகள் யார்! இந்தியாவிலிருந்து ஒலித்த குரல் | Semmani Pudhaikuli Director Gowthaman Speech

அத்துடன் குறித்த பகுதியானது யுத்த காலத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே காணப்பட்டது. ஆகையால் அந்தப் பகுதிக்குள் இராணுவத்தினரை மீறி எவரும் உள்ளே செல்ல முடியாது.

ஆகையால் இந்த கொடூர கொலைகளை இலங்கை இராணுவமே மேற்கொண்டிருக்கும் என்ற கருத்தில் ஐயம் இல்லை. எங்கள் மக்களின் விடியலுக்காகவும், எம் மண்ணின் விடுதலைக்காகவும் போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பினரை பயங்கரவாதிகள் என்றார்கள்.

எம் தமிழ் மக்களையும் பயங்கரவாதிகளாக தென்னிலங்கை தேசத்துக்கு எடுத்துக் காட்டினார்கள். உண்மையான பயங்கரவாதிகள் யார் என்பதை இப்போது உலகம் அறிகிறது.

அந்த புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட தாயும் சேயும் என்ன பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள்? புத்தகப் பையுடன் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன் என்ன பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபட்டான்? தாய் மண்ணுக்காக போராடியவர்கள் பயங்கரவாதிகளா? அல்லது மண்ணின் உரிமைக்காக போராடிய இனத்தையே வேரோடு அழிக்க வேண்டும் என்ற கோர முகத்துடன் செயற்பட்டவர்கள் பயங்கரவாதிகளா? என்ற கேள்விக்கு செம்மணி மனிதப் புதைகுழியானது பதில் தந்துள்ளது.

இதுவரை 33 எலும்புக்கூடுகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழியை சுற்றி நோட்டமிடும் மர்ம வாகனம்

செம்மணி புதைகுழியை சுற்றி நோட்டமிடும் மர்ம வாகனம்

யுத்தம் நிறைவுற்று 16 ஆண்டுகள் 

குறித்த பகுதியில் 600க்கு மேற்பட்டோரது எலும்புக்கூடுகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஈழ மண்ணின் உண்மையான பயங்கரவாதிகள் யார்! இந்தியாவிலிருந்து ஒலித்த குரல் | Semmani Pudhaikuli Director Gowthaman Speech

மீட்கப்பட்ட 33 எலும்புக்கூடுகளிலேயே இத்தனை கொடூரங்கள் வெளிப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள எலும்புக்கூடுகளில் இன்னமும் எத்தனையெத்தனை குரூரங்கள் இருக்குமோ என நினைக்கும்போது நெஞ்சம் பதைபதைத்து.

அடி வயிறே பற்றியெரிகிறது. யுத்தம் நிறைவுற்று 16 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

போராட்டங்களில் ஈடுபட்ட பலர் தமது பிள்ளைகளுக்கு அல்லது தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே வயது மூப்பினாலும் பல்வேறு காரணங்களாலும் உயிரிழந்துள்ளார்கள்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது சொந்தங்களுக்கு என்ன நடந்தது என்று விடயத்தையாவது ஏனைய உறவுகள் தமது வாழ்க்கை காலத்தில் தெரிந்துகொள்ள வேண்டும்.

யுத்தம் நிறைவுற்று 16 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையிலும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் ஏன் இந்த விடயங்களை அம்பலப்படுத்தவில்லை?

இதிலேயே தெரிகிறது அவர்களது இனவாத முகம். என்னதான் மூடி மூடி மறைத்தாலும் உண்மைகள் எப்போதும் உறங்காது என்பதற்கு செம்மணிப் புதைகுழி ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

செம்மணி புதைகுழி

கடந்த காலத்தில் மோசடிகளில் ஈடுபட்ட அமைச்சர்களையும் அதிகாரிகளையும் தற்போதை அநுர அரசு தண்டிக்கிறது.

ஈழ மண்ணின் உண்மையான பயங்கரவாதிகள் யார்! இந்தியாவிலிருந்து ஒலித்த குரல் | Semmani Pudhaikuli Director Gowthaman Speech

அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் இந்த செம்மணி புதைகுழி விவகாரத்தில் அவர்களும் இனவாத கொள்கையில் செயற்படுகின்றார்களா?

அல்லது அனைத்து இனங்களையும் சமமாக வழி நடத்துகின்றார்களா என்ற விடயம் இனிவரும் அவர்களது செயற்பாட்டில் உறுதியாக தெரியவரும். பாதிக்கப்பட்ட எமது தொப்புள் கொடி உறவுகளுக்கு நீதி கிடைக்கும் காலம் கனிந்து வருகிறது என எனக்கு தோன்றுகிறது.

இதனை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி சர்வதேச சமூகங்களும், புலம்பெயர் உறவுகளும், தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளும் ஓரணியில் நின்று இலங்கை அரசாங்கத்தின் மீது ஆக்கப்பூர்வமான அழுத்தங்களை கொடுத்து பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கிடைப்பதற்கு வழிசமைக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கிடைப்பதற்கு தொப்புள் கொடி உறவுகளாக நாம் எப்போதும் இறுக கைப்பற்றி தோளோடு தோள் நிற்போம். அறம் வெல்லும்”வெல்வோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, தமிழீழம், சென்னை, India

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, வவுனியா, Colombes, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, நியூ யோர்க், United States, கோண்டாவில் கிழக்கு

30 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Herne, Germany

30 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, குப்பிளான், சென்னை, India, Toulouse, France

24 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
38ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், India, புங்குடுதீவு

30 Jun, 1987
மரண அறிவித்தல்

புளியங்கூடல், கல்விளான், விசுவமடு, கொக்குவில், Paris, France, Basel, Switzerland

27 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US