குவைத் நோக்கி சென்ற விமானம் இடைநடுவில் திருப்பி அழைப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து குவைத் நகர சர்வதேச விமான நிலையத்திற்குப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-229, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 2 மணி நேரம் 21 நிமிடங்களுக்குப் பிறகு கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.
இந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், UL-229, இன்று (08.01.2026) மாலை 6.44 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து குவைத் நகர சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்டுள்ளது.
விமானத்தில் 179 பயணிகளும் 8 பணியாளர்களும்
இருப்பினும், இந்த விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விமானி இது குறித்து கட்டுநாயக்க விமான நிலைய செயல்பாட்டு அறைக்குத் தகவல் அளித்து, விமானத்தைத் திருப்பி அனுப்புமாறு கூறியுள்ளார்.

அதன்படி, இரவு 9.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனது விமானத்தை பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் தரையிறக்க விமானி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த விமானத்தில் 179 பயணிகளும் 8 பணியாளர்களும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இது குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தலைவர் தீபால் பெரேரா, இந்த விமானத்தில் உள்ள பயணிகளை மாற்று விமானங்கள் மூலம் குவைத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |