பலரையும் கலங்க வைத்த செம்மணியில் புதையுண்டவர்களின் உடல்கள்!
செம்மணி மனிதப் புதைகுழிக்கான போராட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த அமைச்சர் சந்திரசேகரனை சிலர் தடுத்தமை கண்டிக்கத்தக்க விடயம் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.
நேற்று (25) யாழ்ப்பாணம் வருகை தந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்டர் ராக்கை சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உரிய முறையில் விசாரணை செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
செம்மணி போராட்டம்
அதனை வலியுறுத்தி இடம்பெற்ற போராட்டத்தில் அமைச்சர் சந்திரசேகரன் கலந்து கொண்டிருந்த வேளையில் சிலர் அவரை தடுத்தனர். அது தவறு அதற்கு நாம் மனம் வருந்துகிறோம்.
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி போராடும் தாய்மார்கள் என்ற வகையில் எமது நீதிக்கான பயணத்தில் ஒன்றிணைபவர்களை புறக்கணிப்பது எமது நோக்கம் அல்ல.
அமைச்சர் எமது போராட்டத்திற்கு வருகை தந்தது நீதியை எதிர்பார்த்து காத்திருக்கின்ற எமக்கு சாதகமான விடயம். அவரும் இந்த போராட்டத்திற்கு கலந்து கொண்டவராய் பொறுப்பு கூறுவதாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 17 மணி நேரம் முன்

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
