சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு

Ampara Sammanthurai Local government election Sri Lanka 2025
By Farook Sihan Jun 26, 2025 09:17 AM GMT
Report

சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் இப்றாலெப்பை முகம்மட் மாஹீரும் உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் வெள்ளையன் வினோகாந்தும் தெரிவாகினர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவிக்கு தெரிவு செய்வதற்கான கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ. எல். எம். அஸ்மி தலைமையில் சபை மண்டபத்தில் இன்று(26) காலை நடைபெற்றது.

புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 23 உறுப்பினர்கள் கூட்ட மண்டபத்தில் சமூகமளித்திருந்தனர்.

அர்ச்சுனா எம்.பியின் பதவி தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்மானம்

அர்ச்சுனா எம்.பியின் பதவி தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்மானம்

தவிசாளர் 

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் 09 உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 05 உறுப்பினர்களும் சுயேட்சைக் குழு சார்பில் 03 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பில் 02 உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தி சார்பில் 02 உறுப்பினர்களும் தமிழரசுக் கட்சி சார்பில் 01 உறுப்பினரும் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் 01 உறுப்பினரும் என 23 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இதன்போது, உள்ளூராட்சி ஆணையாளர் புதிய தவிசாளருக்கான முன்மொழிவுகளை கோரினார். இந்நிலையில், இருவர் புதிய தவிசாளர் தெரிவிற்காக சபையில் உறுப்பினர்களினால் பிரேரிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, பகிரங்க வாக்கெடுப்பா அல்லது இரகசிய வாக்கெடுப்பா என சபையில் விடப்பட்டது. இதன் போது பெரும்பாலான உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பினை கோரினர்.

சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு | Sammanthurai Pradeshiya Sabha Chairman

இதற்கமைய, உறுப்பினர்களால் பிரேரிக்கப்பட்டு வழிமொழியப்பட்ட இரண்டு புதிய தவிசாளர் தெரிவு உறுப்பினர்களும் பகிரங்க வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏனைய உறுப்பினர்களால் புதிய தவிசாளராக தெரிவு செய்ய கோரப்பட்டது.

இதன்போது, சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளரை சபையின் 23 உறுப்பினர்களில் தமிழரசுக் கட்சி - 01 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 09 சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் - 02 ஐக்கிய மக்கள் சக்தி கட்சி - 02 உறுப்பினர்கள் உள்ளடங்கலாக பிரதிநிதிகள் ஆதரித்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் புதிய தவிசாளராக போட்டியிட்ட ஐ.எல்.எம். மாஹிர், 14 ஆசனங்களை பெற்று சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவானார்.

உப தவிசாளர்

எதிராக போட்டியிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மற்றுமொரு தவிசாளர் வேட்பாளரான சாப்தீன் நளீம் 07 வாக்குகளைப் பெற்றார்.

இதன்படி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஐ.எல்.எம். மாஹிர், புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி ஆணையாளர் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.

இதன்போது, நடைபெற்ற தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பகிரங்க வாக்கெடுப்பின் போது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். மேலும் கூட்டத்தின் தொடர்ச்சியாக உப தவிசாளர் தெரிவு நடைபெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு | Sammanthurai Pradeshiya Sabha Chairman

3 பேர் புதிய உப தவிசாளர் தெரிவில் உள்வாங்கப்பட்ட நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் முன்மொழியப்பட்ட உறுப்பினர் வெள்ளையன் வினோகாந் என்பருக்கு 12 வாக்குகளும் சுயேட்சைக்குழு உறுப்பினரான சுலைமாலெப்பை அப்துல் நஸார் என்பவருக்கு 07 வாக்ககளும் ஆனந்தம் சதானந்தம் என்பவருக்கு 2 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் முன்மொழியப்பட்ட உறுப்பினர் வெள்ளையன் வினோகாந் 05 மேலதிக வாக்குகளை பெற்று உப தவிசாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன் அஷ்ரப் தாஹிர் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

புதிய தவிசாளர் தெரிவினை முன்னிட்டு சம்மாந்தறை பிரதேச சபையை சுற்றி பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதனை அவதானிக்க முடிந்தது.

பல கொலைச் குற்றச்சாட்டுக்களில் மீண்டும் சிக்கியுள்ள பிள்ளையான்

பல கொலைச் குற்றச்சாட்டுக்களில் மீண்டும் சிக்கியுள்ள பிள்ளையான்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US