ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சந்நிதி முருகனுக்கு சற்றுமுன் கொடியேற்றம்..!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று சரியாக 12:00 மணியளவில் ஆயிரக்கணக்கான அடியவர்கள் புடை சூழ கோலகலமாக ஆரம்பமாகியுள்ளது.
இதில் விசேட திருவிழாக்களாக 01.09.2025, காலை 9.00 மணிக்கு பூங்காவனத் திருவிழாவும், 02.09.2025, காலை 8.00 கைலையா வாகன உற்சவமும், 05.09.2025, மாலை 6.00 சப்பறத் திருவிழாவும், 06.09.2025, காலை 7.00 தேர் திருவிழாவும், 07.09.2025, காலை 8.00 தீர்த்தத் திருவிழாவும், இடம் பெறவுள்ளன.
கொடியேற்றம்
சந்நிதி முருகன் ஆலய 2025. ம் ஆண்டுக்கான பெருந்திருவிழாவிற்காக வருகைதரவிருக்கும் அடியார்கள் நலன்கருதி உள்ளூராட்சி மன்றத்தினர் சுத்தப்படுத்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
அதேவளை பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் நுளம்புக் கட்டுப்பாடு மற்றும் குடிநீர் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்நிதி முருகன் ஆலய பெருந்திருவிழாவை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாதுகாப்பு கடமையில் குடிசார் உடையிலும், சீருடையிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை நாளாந்தம் பசித்தோர்க்கும், வறுமையிலுள்ளோர்க்கும் அறப்பணி ஆற்றிவரும் சந்நிதியான் ஆச்சிரமத்திலும் விசேட பஜனை வழிபாடுகளுடன் சிறப்பு பூசைகளும் இடம் பெற்று ஆச்சிரமத்திலும் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூசைகள் இடம் பெற்றதுடன் நாளாந்த திருவிழாக்காலத்தில் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளன.
படங்கள்- தீபன்


















