மனைவி வைத்தியசாலையில் - கணவன் வீட்டிலிருந்து சடலமாக மீட்பு
முல்லைத்தீவு - செல்வபுரம் பகுதியில் ஆணொருவர் வீட்டில் சடலமாக கிடந்துள்ள சம்பவம் இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் 61 வயதுடைய குஞ்சுமோகன் அசோகன் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவது தொடர்பில் அயலவர்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் மனைவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பிள்ளைகள் தொழிலின் நிமித்தம் வேறு பிரதேசத்தில் வாழ்ந்து வருவதாகவும் தெரியவருகிறது.
சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்ற வரும் நிலையில், நீதவான் பார்வையிட்ட பின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
