ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டணியின் கூட்டத்தை புறக்கணித்த செல்வம் எம்.பி
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் (சங்கு) கூட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் (சங்கு) முக்கிய அரசியல் கலந்துரையாடல் ஒன்று நேற்று (18.01) காலை முதல் பிற்கல் வரை வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.
புறக்கணித்த செல்வம் எம்.பி
இதில் அக்கட்சியின் கூட்டணி கட்சிகளான ஈபிஆர்எல்எப், புளொட், ஜனநாயக போராளிகள் கட்சி, சமத்துவ கட்சி ஆகியவற்றின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அதன் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ கட்சியின் தலைவரும், அக் கூட்டணியின் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
அவரது கட்சி சார்ந்த உயர்மட்ட உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பதுடன் ரெலோ சார்பில் பெண் ஒருவர் மாத்திரமே கலந்து கொண்டிருந்தார்.
எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
இந்த நிலையில், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் (சங்கு) கூட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த கலந்துரையாடலில் மாகாணசபைத் தேர்தல், புதிய அரசியலமைப்பு, கட்சியின் மாநாடு, பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலக அரசியலில் பதற்றம்: ட்ரம்பின் நகர்வு சர்வாதிகாரமா..! அ. யோதிலிங்கம் 45 நிமிடங்கள் முன்
டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? News Lankasri