சுமந்திரன் மீது பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்த செல்வம் அடைக்கலநாதன்
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்(Sumanthiran) தனி மனிதனாக எல்லா விடயங்களையும் கையாள நினைப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சியினுடைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில், அண்மையில் இடம்பெற்ற மீனவர்களுக்காகக் கடல் வலி போராட்டத்துக்கு ரெலோ அமைப்பின் ஆதரவு இல்லை என வெளிவந்த செய்தி தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
''ஒரு தனிமனிதனுடைய செயற்பாடாக இந்த போராட்டங்கள் அமையக்கூடாது. விவசாயம் மற்றும் கடற்றொழில் என இரு பிரதான துறையைச் சார்ந்த மக்கள் போராட்டம் நடாத்தி வருகிறார்கள்.
இதில் தனிப்பட்ட முறையில் சுமந்திரன் திகதியை அறிவிக்கிறார். யாருக்குமே தெரியாது. இது ஒரு பாரிய பிரச்சினை.
எங்களுடைய மீனவர்கள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்ற வேளையில் நாங்கள் இதை எப்படி கையாளலாம் என்பதை முதல் ஆராய்ந்திருக்க வேண்டும்.
அதைவிட ஒரு கூட்டு முயற்சி கட்டாயம் இருத்தல் வேண்டும். சுமந்திரன் கூட்டமைப்புக்குள்ளும் எல்லா விடயங்களையும் கையாள வேண்டும், வெளியிலும் எல்லா விடயங்களையும் கையாள வேண்டும், தமிழரசு கட்சிக்குள்ளும் எல்லா விடயங்களையும் கையாள வேண்டும் எனத் தனிமனிதனாக நினைப்பது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது'' என அவர் தெரிவித்துள்ளார்.

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri
