வடக்கு - கிழக்கு இளைஞர் சமுதாயத்தில் உள்ள எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும்!
வடக்கு - கிழக்கில் உள்ள இளைஞர், யுவதிகள் மத்தியில் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆர்வமும் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான வழியை கையாள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் உள்ளதாக வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (22) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வடக்கு - கிழக்கில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றது. இதனுடாக மக்களின் நிலைப்பாட்டையும் தெரிந்து கொண்டுள்ளோம்.
இளைஞர் மத்தியில் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆர்வம் காணப்படுகிறது. மேலும், இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிவகைகளையும் நாங்கள் கையாள வேண்டும் என்கிற விடையத்தையும் எதிர்பார்க்கின்றனர்.
குறித்த இரு விடயங்களையும் ஒரே திசையில் கொண்டு செல்ல வேண்டும் என்கிற சூழ்நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. திறமையுள்ளவர்கள் தெரிவு செய்யப்படாமல், அரசியல் ரீதியான செயற்பாடுகளில் தங்களுடன் நிற்கின்றவர்களுக்கு சில அமைச்சர்களைக் கொண்ட கட்சிகள் வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுத்துள்ளனர்” என கூறியுள்ளார்.
மேலும் கூறியுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |