ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தால் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலம் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதியுடன் முடிவடைவதாக டுபாயில் உள்ள இலங்கை துணைத்தூதரகம் அறிவித்துள்ளது.
எனவே ஐக்கிய அரபு அமீரகம் வௌியிடும் வெளியேறும் சான்றிதழை வழங்குவதற்கு சில காலம் தேவை என்பதால் செல்லுபடியாகும் விசா இல்லாத இலங்கையர்கள் இம்மாதம் 25ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இலங்கைக்கு பயணிக்க விரும்பும் தற்காலிக பயண ஆவணத்திற்கு (TTD) வந்து விண்ணப்பிக்குமாறு இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொது மன்னிப்புக்காலத்தில், உதவி தேவைப்படும் இலங்கையர்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு துணைத்தூதரகம் உறுதியாக உள்ளதாக அறிவித்துள்ளது.
விசா இன்றி தங்கியுள்ள இலங்கையர்கள்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியுள்ள இலங்கையர்கள், பொது மன்னிப்பு காலத்தை பயன்படுத்தி சட்டப்பூர்வ விசாவைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் அவ்வாறு செய்ய முடியாத இலங்கையர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பாக இலங்கைக்கு திரும்புமாறு துணைத்தூதரகம் மேலும் கேட்டுக்கொள்கிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |